பிளேட்டோவின் குடியரசு

முதல் புத்தகம்

சாக்கிரடீஸும் கிலௌகோனும்

நான் நேற்று தேவதிற்கு பிரார்த்தனை செய்வதற்காகவும், விழாவையும் ஒரு புது விதமாக கொண்டாடுகிறார்களாம் என்று பார்ப்பதற்காகவும், அரிஸ்தோனின் மகன் கிலெளகோன் உடன் பிரேயஸ்ஸுக்கு கிளம்பினேன். மக்களுடைய ஊர்வலத்தை கண்டு மகிழ்ச்சியடைந்தேன்; ஆனால் திரேஷன் குழுவைதான் மிகவும் அழகாக இருந்த்து.

எங்கள் செபங்களை முடித்து, காட்சியையும் பார்த்தப்பின்பு, நாங்கள் நகரின் திசையில் திரும்பினோம். வீட்டிற்குச் சென்ற பொழுது செபலஸின் மகன் பொலிமார்குஸ் எங்களை தூரத்திலிருந்து கண்டு, அவருடைய வேலைக்காரனை எங்களுக்குப் பின்பு ஓடி அனுப்பி எங்களை அவரது பணிக்காக காத்திருக்க கேட்டார். வேலைக்காரன் என் சால்வையை பின் பக்கத்திலிருந்து இழுத்து பிடித்து, “பொலிமார்குஸ் உங்களை காத்திருக்க விரும்புகிறார்”, என்று கூறினான். நான் திரும்பி, அவனுடைய எஜமானர் எங்கே இருக்கிறார் என்று கேட்டேன்.

“அந்தா வருகிறார், நீங்கள் கொஞ்சம் காத்திருந்தால்”, இளைஞன் கூறினான்.

நாம் நிச்சயமாக காத்திருப்போம் என்று கிலௌகொன் கூறி, சில நிமிடங்கள் பின் பொலிமார்குஸ் வந்து சேர்ந்தார்.

அவருடன், கிலௌகொனின் தம்பி அடிமாண்டுஸும், நிஸியஸின் மகன் நிஸராட்டுஸும், ஊர்வலத்தில் இருந்த சிலர் மற்றவர்களும் வந்தார்கள்.

சாக்ரடீஸும்-பொலிமார்கஸும்-கிலௌகொனும்-அடிமாண்டுஸும்

பொலிமார்குஸ் என்னைப் பார்த்து, “சாக்ரடீஸ், நீங்களும் எங்கள் தோழனும் ஏற்கனவே நகரத்துக்கு கிளம்புகிறீர்கள் என்று உணர்கிறேன்”, என்று அவன் கூறினான்.

“உன்னுடைய உணர்துதல் முழுவதும் பிழையில்லை”, என்று நான் சொன்னேன்.

“ஆனால் நாம் எத்தனை பேர் வந்திருக்கிறோம் என்று நீ பார்க்கிறாயா?”, அவர் மீண்டும் இணைந்தார். 

“நிச்சயமாக”, நான் பதிலளித்தேன்.

“அப்போ இவை அனைந்திருக்கிற எல்லாவறையும்விட நீங்கள் பலமாக இருக்கிறீர்களா? இல்லை என்றால், இருக்குகிற இடத்தில் நீங்கள் இருக்க வேண்டும்”, அவர் மிரட்டினார்.

“அதற்கு பதிலாக, எங்களை போக விட்டு விட உங்களை நியாயமாக தூண்ட முடியுமா?”, என்று கேட்டேன்.

“நாங்கள் உங்களிடம் கேட்க மாட்டோம் என்று முடிவுவிட்டால், நீங்கள் நம்மலை எப்படி தூண்டுவிட்டுவிடுவீர்கள்?”, அவர் வலியுறுத்தினார்.

“நிச்சயமாக தூண்டமாட்டோம்”, கிலௌகொன் பதிலளித்தார்.

“சரி, நாங்கள் கேட்க போவதில்லை; அதில் நீங்கள் தாறாலமாக நம்பலாம்”, என்று அவர் தீர்த்தார்.

அப்போது அடிமாண்டுஸ், “தெய்வதையை மகிமைப்படுத்துவதற்காக மாலை நேரத்தில் நடக்கப் போகிற தீவட்டி குதிரைப்போட்டி ஒட்டத்தை பற்றி உங்களுக்கு யாரும் சொல்லவில்லையா?”, என்று மீண்டும் சேர்ந்தார். 

“குதிரைகள்!”, நான் பதிலளித்தேன், “அது உண்மையிலேயே ஒரு புதுமைதான். ஓட்டம் நடக்கும்போலுது, குதிரை வாரிய-வீரர்கள் தீவட்டத்தை ஒருவர்-ஒருவருக்குள் கடந்து போவார்களா?” 

“ஆமாம்”, பொலிமார்கஸ் உறுதிப்படுத்தினார். “ஆனால் அது மட்டுமில்லை, இரவில் ஒரு திருவிழா கொண்டாடுபடும். அதை நீங்கள் நிச்சயமாக பார்க்க வேண்டும்.”

“இருவிருந்தில் இருக்கிற உருசிகரங்கலை உணவளித்து, அதற்கு பிறகு நாம் எழுந்து விட்டு இந்த விழாவையை பார்ப்போம்; அங்கே இளைஞர்கள் கண்டிப்பாக கூடியிருப்பார்கள். ஒரு நல்ல விவாதத்துக்குள் நாம் கலந்துகொள்வோம். அப்போ, பிடிவாதமாக இருக்காமள், எங்களுடன் தங்கியிருங்கள்.”

“நீங்கள் வலியுறுத்துக்கொண்டால் நாங்கள் இணங்க வேண்டும் என்று நினைக்கிறேன்”, கூறினார் கிலௌகொன்.

“சரி, மிகவும் நல்லது”, நான் பதிலளித்தேன்.

கிலௌகோனும் செபலஸும் சாக்ரடீஸும்

பொருந்துடன் நாம் பொலிமார்குஸுடன் அவரது வீட்டிற்கு சென்றோம். அங்கே அவருடைய சகோதரர் – லிசியஸும் யுதியடீமஸும் – அவர்களை கண்டோம். அவருடரே கூடி ச்சல்ஸடோன் நாட்டவர் திராசிமாகுஸும் பையானியாவு நாட்டவர் ச்சார்மாந்தடீஸும் அறிஸ்தொனீமசின் மகன் கிளைதபோனும் இருந்தார்கள். பொலிமார்குஸின் தந்தை செபலஸும் அங்கே இருந்தார். நான் அவரை கடைசியாக கண்டு கன காலமாக இருந்தது. அவர் கவனத்திற்குரிய வயது முதிர்ந்தவராக மாறிவிட்டார் என்று நினைத்தேன்.

அவர் ஒரு அணையாசனைக் கதிரையில் உட்கார்ந்திருந்தார். நீதிமன்றத்தில் தியாகம் செய்து கொண்டிருந்தபடியால் அவருடன் தலையில் ஒரு மாலை அலங்கரிக்கப்பட்டிருந்தன. அவற்றின் அருகிடம் சில கதிரைகள் அரைவட்டமாக அறையில் ஒழுங்குபடுத்திருந்தன. அவற்றின் அருகிடம் நாங்கள் உட்கார்ந்தோம்.

அவர் ஆசைப்பட்டு என்னை வணங்கி இவ்வாறு உரையாற்றினார்:

“நீங்கள் அடிக்கடி என்னை பார்க்க வாரதில்லை சாக்ரடீஸ். உங்களை என்னால் இன்னும் போய் பார்க்கேலும் என்றால் உங்களை என்னிடம் வர கேட்கமாட்டேன். ஆனால் என் வயதில் நகரத்தை வசதியாக அடையேலாது. ஆதலால் நீங்கள் இங்கே பிரேயஸ்ஸுக்கு அடிக்கடி வர வேண்டியது.

உமக்குச் சொல்லுகிறேன் சாக்ரடீஸ், உடலின் மகிழ்ச்சிகள் மங்கி மங்கி போக, சம்பாஷணத்தின் மகிழ்ச்சியும் அழகும் எனக்கு கூட கூட அதிகப்படுகிறது. ஆகையால், என் கோரிக்கையை மறுத்துவிட வேண்டாம். பதிலாக, எங்கள் வீட்டை உங்கள் அடைக்கலமாக பாவித்து இந்த இளைஞர்களுடன் தோழுங்கள். நாங்கள் பழைய நண்பர்கள். எங்களுடன் சௌக்கியமாக இருப்பீர்கள்.”

“வயதான மனிதர்களுடன் உரையாடுவிட எனக்கு வேறு விரும்புவது  எதுவுமில்லை செபலஸ். வயதானவற்களை வழிப்பயணிகளாக உட்காருகிறேன். அவர்கள்தான் ஒரு பயணத்தில் போய்விட்டு சென்றிருக்கிறார்கள். அவர்களிடம் நான் அது பற்றி விசாரிக்க வேண்டும். அந்த வழி மென்மையானதா, எளிதான? அல்லது அது அரியவழியா, கஷ்டமா? நான் கேட்க வேண்டும், ஏனென்றால் அந்த பயணத்தில் நானிம் கூட போக வேண்டியிருக்கும்.”

“இந்த கேள்வி உங்களிடம் நான் கேட்க விரும்புகிறேன். கவிஞர்கள் ‘முதுமை வாசல்’ என்று அழைக்கின்ற நேரத்தில் நீங்கள் வந்து செந்திறுக்கிறீர்கள். வாழ்க்கை இறுதியில் கிட்ட கஷ்டமா? அல்லது என்ன அறிக்கை சொல்கிறீர்கள்?”, என்று நான் பதிலளித்தேன்.

“என் சொந்த உணர்வு என்னெண்டு நான் உமக்கு சொல்கிறேன் சாக்ரடீஸ்”, என்று அவர் சொன்னார்.

“வயது மனிதர்கள் ஒன்றாக ஒட்டிக்கொள்கிறோம். பழைய பழமொழி கூறியது போல், நாங்கள் ஒத்த இறகான குருவிகள். நாம் ஒன்றாக ஒட்டிக்கொள்கின்றன.”

“பொதுவாக, எங்கள் கூட்டங்களில் என் அறிமுகத்தின் கதை இப்பிடிதான்: எனக்கு சாப்பிட ஏலாது. எனக்கு குடிக்க முடியாது. இளங்கால மகிழ்ச்சிகளும் காதல்களும் என்னை விட்டு ஓடிவிட்டனர். முன்னொரு காலத்தில் எனக்கு நல்ல நேரம் இருந்தது, ஆனால் இப்போ அது போய்விட்டது. வாழ்க்கை இனி வாழ்க்கை இல்லை.”

“தன் உறவுகளால் அவற்றின் மேல உச்சரித்தபட்ட இகழ்களைப்பற்றி சிலர் முறையிடுவார்கள். அவர்களின் வயது எத்தனை தீமைகளின் காரணம் என்று உங்களுக்கு பரிதாபமாக சொல்வார்கள்.”

“ஆனால் எனக்கு சாக்ரடீஸ் இப்பிடி தெரிகிறது. இந்த முறையிடுகிறவர்கள் குற்றம் உண்மையில் தவறாதத்தில் குற்றம் சாட்டுகிறார்கள். ஏனென்றால் கிழமைதான் தீமைகளுக்கு காரணம் என்றால், நானும் மற்றும் ஒவ்வொரு வயதானவர்களும் முறையிடுவர்கள் போலவே உணர்ந்திருப்போம்.”

“ஆனால் இது என் சொந்த அனுபவம் இல்லை. மற்றம் எனக்கு அறியப்படுகிற மற்றவர்களின் அனுபவமும் இல்லை.”

வயதான கவிஞர் சாபக்லீஸின் கேட்டுக் கொள்ளப்பட்ட கேள்விக்கு மறுமொழி நான் நன்றாக ஞாபகத்திருக்கிறேன்.

“‘காதல் எப்படி வயதுடன் ஒத்திருகிறது சாபக்லீஸ்? நீ இன்னும் ஒருமுறையாக இருந்த மனிதனாய் இன்னும் இருக்கிறாயா?'”

“‘அமைதி’, அவர் பதிலளித்தார். நீங்கள் குறிப்பிடுகிற விஷயத்திலிருந்து நான் மிக மகிழ்ச்சியுடன் தப்பிவிட்டிருக்கிறேன். ஒரு பைத்தியமும் சினமும் பிடித்த அதிகாரியிலிருந்து தப்பிவிட்டேன் என்று நான் உணர்கிறேன்.”

“அப்போதிலிருந்து அவரது வார்த்தைகள் அடிக்கடி என் மனதில் ஏற்படுகிறது. அதின் அப்போதே உணர்ந்த நியாயம் எனக்கு இப்போதும் நன்றாக தெரிகிறது.”

இராகங்கள் அதன் இளமை பிடியை ஓய்வெடுக்கும்போது முதுமை காலத்தின் ஆழமான அமைதியும் சுதந்திரமும் உண்மையிலேயே உணரப்படுகிறது.

சாபக்லீஸ் சொல்வது போல், அப்போதேதான் நாங்கள் ஒரே ஒரு அதிகாரியின் மட்டுமல்ல ஆனால் பல அதிகாரிகளின் பிடியிலிருந்து கூட விடுவிக்கப்படுகிறோம்.

உண்மையாகவே சாக்ரடீஸ் உறவுகளைப் பற்றி அழுங்குதல்களுக்கம், குறைகூறுகைகளுக்கம் ஒரே ஒரு காரணம் மட்டும் உள்ளது.

அதற்கு காரணம் வயதான வயது அல்ல. மனிதனின் குணங்களும் சுபாவங்களும்தான் காரணம். ஒரு அமைதியான, மகிழ்ச்சியானவருக்கு முதிர்ந்த வயதின் அழுத்தம் அரிதாகவேதான் உணரப்படும்.

ஆனால் எதிரான வேறொரு குணமுள்ளவருக்கு வயதின் அழுத்தங்களும் இளமையின் மகிழ்ச்சிகளும் சமமாக பாரப்படும்.

அவரது ஞானறிவை நான் பாராட்டி கேட்டேன். அவர் மனதின் உட்கருத்தை வெளியே தீண்டியுணர்க விரும்பி, அவர் இன்னும் தொடருவார் என்று பொருட்டு நான் இது சொன்னேன்:

“ஓம் செபலஸ். ஆனால், மக்கள் பொதுவாக நீங்கள் இவ்வாறு பேசும்போது  உங்களை நம்பமாட்டார்கள் என்று சந்தேகிக்கிறேன்.

பழைய வயதின் முதுமை உங்கள் மகிழ்ச்சியான மனநிலையால் உங்களுக்கு மேல் மெதுவாக குந்துள்ளனர் என்று அவர்கள் நினைக்கமாட்டார்கள்.

நீங்கள் பணக்காரராக இருப்பதாலதான் உங்களுக்கு இவ்வாறு உணர்கிறது என்று நினைப்பார்கள். ஏனென்றால் செல்வம் ஒரு பெருந்தொகையான சுகம்வரவாளி என்கிறது யாவருமறிந்த அறிவு.”


© Felix Inparajah, 2018. All rights reserved.

One thought on “பிளேட்டோவின் குடியரசு

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s